An interesting poem in tamil...The climax is at the last lines..So read upto the end...If you have plus-2 studying children, sure you will enjoy this Kavithai ! I guarantee!!
*என் வீட்டு
தொலைக்காட்சி
"கேபிள்" துண்டிக்கப்பட்டு
தூசியுடன்
காட்சி அளிக்கிறது..
*உறவினர் எவரது
விசேஷங்களுக்கும்
ஆறு மாதமாக
செல்வதில்லை
என் பெற்றோர் !
சென்றாலும்
பத்து நிமிடங்களுக்கு மேல்
இருப்பது மில்லை!
*என் வகுப்பை
சொல்லக் கேட்ட
அடுத்த நிமிடமே
அறிவுரைகளை
வாரி வழங்குவது
வாடிக்கை ஆகி விட்டது
விருந்தாளிகளுக்கு!
*தெரிந்த - அறிந்த
பலரும் எனக்காக
பிரார்த்தனை பண்ணுவதாக
சொல்கிறார்கள்!
"என்ன செய்யப் போறாளோ?"
எப்போதும் எல்லோரிடமும்
புலம்பியபடியே இருக்கிறாள்
அம்மா!
*போர் மேகம் சூழ்ந்த
நாட்டின் எல்லைப் பகுதியை
தேர்வு மேகம் சூழ்ந்தபடி
"திக்..திக்" கென
எனது வீடு!
நான்
"பிளஸ் 2" படிக்கிறது
அவ்வளவு பெரிய குத்தமாங்க?
by m.stalin saravanan,karamkkudi
courtesty RANI tamil magazine
No comments:
Post a Comment