tamil jokes for sharing in SMS
இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட
முடியல டாக்டர்..?
🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட
முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!
*******************************************************************
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம்
போகிறீங்க ?
.
டாக்டர் தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக்
பன்னிக்க சொன்னார் அதான்
*******************************************************************
நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்...
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் ...
*******************************************************************
ஒரு காப்பி எவ்வளவு சார் ?..
5 ரூபாய்..
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?...
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !!!
*******************************************************************
இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
🔗கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
*******************************************************************
ரெண்டு ஆம்பளைங்க கூடி பேசுனா ஏதோ பிரச்சனை நடந்திருக்குனு அர்த்தம்
அதே ரெண்டு பொம்பளைங்க கூடி பேசுனா ஏதோ பிரச்சனை நடக்கபோகுதுனு அர்த்தம்.
*******************************************************************
“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”
“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”
“ நீ மட்டும் இல்லைடே முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”
“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”
“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”
“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”
“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?
“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?”
*******************************************************************விமானம், ராக்கெட்டைப் பார்த்து, நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.
ராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........
அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே...
பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது.
நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி.
அவர்: ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும் கொஞ்சம் பெருசாப் பாருங்களேன்.
ரூம் பாய்: யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு..
*****************
டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
🔗கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா